வேதம் விழுமியது; வித் என்றால் அறிவு, வேதம் அறிவுநூல் எனப்படும். "அறிவுநூல் கல்லா மூடர்" என்பார் அருணகிரிநாதர். அவ்வேதம் நான்கு எனப்படும். அவற்றுள் நான்காவது அதர்வணம் மற்ற மூன்றின் திரட்டு. ஆதலின், இருக்கு (ரிக்), யசுர் (யஜுர்), சாமம் என்னும் மூன்றுமே சிறந்தவை. அதனால், வேதம் 'த்ரயீ' என்று பேசப் பெறுகின்றது.
வேதம் மூன்றனுள் இடையில் உள்ளது யஜுர் வேதம். அது ஏழு காண்டங்களை உடையது. அதன் இடையில் உள்ள காண்டத்துள் 11 அணுவாகங்களை உடையது திருஉருத்திரம் (ஸ்ரீருத்ரம்). இதன் இடையில் ஸ்ரீபஞ்சாட்சரமும் (நமசிவாய) அதன் இடையில் 'சி'காரமும் விளங்குகின்றது. வேத இதயம் சிவபஞ்சாட்சரமாகும். வேதத்தின் கண் திருஉருத்திரம். கண்மணி திருஐந்தெழுத்து என்ப.
(ஆதார நூல், பெரிய புராணம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், உருத்திர பசுபதி நாயனார் புராணம், பக்கம் 255)
No comments:
Post a Comment