தர்ம சாஸ்தா அஷ்டோத்திரம்:

ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தாவிற்கு 4 முதல் 5 அஷ்டோத்திரங்கள் இருப்பினும், சுவாமி ஐயப்பன் மற்றும் சாஸ்தா பூஜைக்கு, 108 திருநாமங்களைக் கொண்ட பின்வரும் அஷ்டோத்திரமே பொதுவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது, 

1. ஓம் மஹாசாஸ்த்ரே நம
2. ஓம் விச்வ சாஸ்த்ரே நம
3. ஓம் லோக சாஸ்த்ரே நம
4. ஓம் தர்ம சாஸ்த்ரே நம
5. ஓம் வேத சாஸ்த்ரே நம
6. ஓம் கால சாஸ்த்ரே நம
7. ஓம் கஜாதிபாய நம
8. ஓம் கஜாரூடாய நம
9. ஓம் கணாத்யஷாய நம
10. ஓம் வ்யாக்ராரூடாய நம
11. ஓம் மஹாத்யுதயே நம
12. ஓம் கோப்த்ரே நம
13. ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
14. ஓம் கதாதங்காய நம
15. ஓம் கதாக்ரண்யை நம
16. ஓம் ரிக்வேத ரூபாய நம
17. ஓம் நக்ஷத்ராய நம
18. ஓம் சந்த்ர ரூபாய நம
19. ஓம் வலாஹகாய நம
20. ஓம் தூர்வாச்யாமாய நம
21. ஓம் மஹாரூபாய நம
22. ஓம் க்ரூரத்ருஷ்டயே நம
23. ஓம் அனாமயாய நம
24. ஓம் த்ரிநேத்ராய நம
25. ஓம் உத்பலாகாராய நம
26. ஓம் காலஹந்த்ரே நம
27. ஓம் நராதிபாய நம
28. ஓம் கண்டேந்து மௌளி தனயாய நம
29. ஓம் கல்ஹாரகுஸுமப்ரியாய நம
30. ஓம் மதனாய நம
31. ஓம் மாதவஸுதாய நம
32. ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
33. ஓம் மஹாபலாய நம
34. ஓம் மஹோத்ஸாஹாய நம
35. ஓம் மஹாபாப விநாசநாய நம
36. ஓம் மஹா சூராய நம
37. ஓம் மஹா தீராய நம
38. ஓம் மஹா ஸர்ப்ப விபூஷணாய நம
39. ஓம் அஸிஹஸ்தாய நம
40. ஓம் சரதராய நம
41. ஓம் ஹாலாஹலதராத்மஜாய நம
42. ஓம் அர்ஜுநேசாய நம
43. ஓம் அக்னிநயநாய நம
44. ஓம் அநங்க மதனாதுராய நம
45. ஓம் துஷ்ட க்ரஹாதிபாய நம
46. ஓம் ஸ்ரீ தாய நம
47. ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷிதாய நம
48. ஓம் கஸ்தூரி திலகாய நம
49. ஓம் ராஜசேகராய நம
50. ஓம் ராஜ ஸத்தமாய நம
51. ஓம் ராஜ ராஜார்சிதாய நம
52. ஓம் விஷ்ணு புத்ராய நம
53. ஓம் வனஜனாதிபாய நம
54. ஓம் வர்ச்சஸ்கராய நம
55. ஓம் வரருசயே நம
56. ஓம் வரதாய நம
57. ஓம் வாயுவாஹனாய நம
58. ஓம் வஜ்ர காயாய நம
59. ஓம் கட்க பாணயே நம
60. ஓம் வஜ்ர ஹஸ்தாய நம
61. ஓம் பலோத்ததாய நம
62. ஓம் த்ரிலோகக்ஞாய நம
63. ஓம் அதிபலாய நம
64. ஓம் புஷ்கலாய நம
65. ஓம் வ்ருத்த பாவனாய நம
66. ஓம் பூர்ணாதவாய நம
67. ஓம் புஷ்கலேசாய நம
68. ஓம் பாசஹஸ்தாய நம
69. ஓம் பயாபஹாய நம
70. ஓம் பட்கார ரூபாய நம
71. ஓம் பாபக்னாய நம
72. ஓம் பாஷண்ட ருதிராசனாய நம
73. ஓம் பஞ்ச பாண்டவ ஸந்த்ராத்ரே நம
74. ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
75. ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம
76. ஓம் பூஜ்யாய நம
77. ஓம் பண்டிதாய நம
78. ஓம் பரமேச் வராய நம
79. ஓம் பவதாப ப்ரசமனாசாய நம 
80. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம 
81. ஓம் கவயே நம
82. ஓம் கவீ நாமதிபாய நம
83. ஓம் க்ருபாளவே நம
84. ஓம் க்லேச நாசனாய நம
85. ஓம் ஸமாய நம
86. ஓம் அரூபாய நம
97. ஓம் ஸேநான்யை நம
88. ஓம் பக்த ஸம்பத் ப்ரதாயகாய நம
89. ஓம் வ்யாக்ர சர்மதராய நம
90. ஓம் சூலினே நம
91. ஓம் கபாலினே நம
92. ஓம் வேணு வாதனாய நம
93. ஓம் கலாரவாய நம
94. ஓம் கம்புகண்ட்டாய நம
95. ஓம் கிரீடாதி விபூஷிதாய நம
96. ஓம் தூர்ஜடயே நம
97. ஓம் விரநிலாய நம
98. ஓம் வீராய நம
99. ஓம் விரேந்த்ர வந்திதாய நம
100. ஓம் விச்வரூபாய நம
101. ஓம் வ்ருஷபதயே நம
102. ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
103. ஓம் தீர்க்க நாஸாய நம
104. ஓம் மஹாபாஹவே நம
105. ஓம் சதுர்பாஹவே நம
106. ஓம் ஜடாதராய நம
107. ஓம் ஸநகாதிமுனிச்ரேஷ்ட ஸ்துத்யா நம
108. ஓம் ஹரிஹராத்மஜாய நம

சுவாமி ஐயப்பனின் திருஅவதார நட்சத்திரம் (மார்கழி உத்திரம்):

தற்பொழுது நடந்தேறி வரும் கலியுக காலகட்டத்தில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மூல தெய்வமான மகா சாஸ்தா பந்தள தேசத்தில், பம்பை ஆற்றங்கரையில் சுவாமி ஐயப்பனாக திருஅவதாரம் செய்த திருநட்சத்திரம் 'மார்கழி உத்திரம்'. 

பலகோடி வருடங்களுக்கு முந்தைய பாற்கடல் கடையப் பெற்ற காலகட்டத்தில், சிவ விஷ்ணு தத்துவங்களின் சங்கமத்திலிருந்து மூல தெய்வமான மகாசாஸ்தா தோன்றிய திருநட்சத்திரம் 'பங்குனி உத்திரம்'.

ஆண்டு தோறும் இவ்விரு தினங்களையும் அவசியம் நினைவு கூர்ந்து ஐயனைப் போற்றித் துதித்து உய்வு பெறுவோம் (சிவசக்தி ஐக்ய சுவரூபனே சரணம் ஐயப்பா)!!!

சபரிமலை ஜோதி தானாகத் தோன்றுவதா அல்லது ஏற்றப்படுவதா ? (சில விளக்கங்கள்):

எண்ணற்ற யுகங்களாக நமது இந்து தர்மம் தனித்தன்மையுடன் நிலைபெற்றுப் பிரகாசித்து வருவது அதன் உன்னதமான கோட்பாடுகளாலும், தெளிவான சித்தாந்தங்களினாலும் மட்டுமேயன்றி எவ்வித அதிசய நிகழ்வுகளாலும் அற்புதங்களாலும் அல்ல எனும் தெளிவான புரிதலோடு இப்பதிவினை அணுகுதல் வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடந்தேறும் அர்த்த, மகா கும்பமேளா விழாக்களில் கோடிக் கணக்கான இந்துக்கள் பங்கேற்றுப் புண்ணிய நீராடி வருவது கண்கூடு.

2013ல் திரிவேணி சங்கமத்தில் நடந்தேறிய கும்பமேளாவில் கலந்து கொண்ட இந்துக்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 10 கோடி. இவை தவிர ஆண்டு தோறும் நடந்தேறும் மாசி மக உற்சவம்; 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தேறும் மகாமகப் பெருவிழா; பூரியில் நடந்தேறும் ரத யாத்திரை ஆகிய நிகழ்வுகளில் எண்ணிலடங்கா பக்தர்கள் பெரும் ஆர்வத்துடனும், உறுதி மாறாத பக்தியுடனும் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். இந்த உற்சவங்கள் யாவுமே மிகவும் இயல்பானவை, எவ்வித அதிசயங்களையும் உள்ளடக்கியவையன்று.

மகர சங்கராந்தி தினமன்று வானில் தோன்றும் திருநட்சத்திரமே 'மகர ஜோதி' என்று குறிக்கப் பெறும். அதே சமயத்தில் 'பொன்னம்பல மேட்டில்' நிகழ்ந்தேறும் தீபாராதனையே 'ஜோதி தரிசனம்' என்றும் 'மகர விளக்கு' என்றும் தொன்றுதொட்டு நிலவி வருகின்றது. அடியவர்கள் கடும் நியமத்துடன் சபரி மலைக்கு யாத்திரை மேற்கொள்வது அம்மலையில் கிடைக்கப் பெறும் தெய்வீக அனுபவத்திற்காகவும், ஐயனின் பரமானந்த தரிசனத்துக்காகவுமே அன்றி வேறெந்த அற்புத நிகழ்வுகளுக்காகவும் அன்று.
இந்துக்கள் ஆழ்ந்த சமயப் புரிதல் கொண்டு விளங்குபவர்கள். திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், கண்ணெதிரிலேயே ஏற்றப்படும் திருஅண்ணாமலையார் தீபச் சுடரைத் தரிசிக்க சுமார் 30 லட்சம் பக்தர்கள் கூடுகின்றனரே, இதை விடவும் வேறென்ன சான்று கூறி விட இயலும்? தானாகத் தோன்றும் தீபச்சுடரில் தெய்வத் தன்மை மிகுந்திருக்கும் என்றோ அடியவர்களால் ஒளியேற்றப்படும் ஜோதியில் சானித்யம் குறைவு என்றோ ஐயனின் அடியவர்கள் கனவிலும் கருதுவதில்லை.

ஒரு சாதாரண கல்லினை வேத மந்திரங்களாலும் இன்ன பிற குடமுழுக்குச் சடங்குகளாலும் கடவுளாக மாற்றும் வல்லமையை இறைவன் நமது இந்து தர்மத்துக்கு அருளியிருப்பது நிதர்சனமன்றோ! மகர ஜோதி அற்புதங்களில் ஒன்று என்றோ, தானாகத் தோன்றுவது என்றோ எவரொருவரும் எக்காலத்திலும் விளம்பரப்படுத்தியதும் இல்லை, அப்படியெல்லாம் அறிவித்துக் கூட்டம் சேர்க்க வேண்டிய எந்தவொரு அவசியமும் நம் இந்து மதத்திற்கும் இல்லை. 'மகர ஜோதி திருவண்ணாமலை தீபம் போலவே வழிவழியாய் நடைமுறையிலுள்ள ஒரு உத்தமமான மரபு' என்ற அளவில் இதனைப் புரிந்து கொள்வதே செய்யத் தக்கது. 

ஜோதி தரிசனம் காண, கூட்ட நெரிசலையும்; உடல் துன்பத்தையும்; இன்ன பிற இடர்களையும் பொருட்படுத்தாது 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்று உளமுருகிக் கதறும் லட்சோப லட்சம் அடியவர்களின் பிரார்த்தனைகளும், நியமத்தோடு கூடிய விரதமும் பலிக்குமாறு அந்த அருட்பெரும் ஜோதியில் சபரி ஐயன் ஆவிர்பவித்துப் பேரருள் புரிவான் என்பதே சத்தியம் (சத்ய சுவரூபனே சரணம் ஐயப்பா)!!!

மகர ஜோதி

 


சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா!!


ஸ்வராஜ்யம்

16ஆவது வயதிலேயே ஸ்வராஜ்யம் எனும் சுதந்திர தேச முழக்கத்திற்கு வித்திட்ட வீர சிவாஜி மன்னர்!!!

வீர சிவாஜி மன்னரின் விருப்பத்தை நிறைவேற்றிய காஞ்சி மகான் (பூனேவிற்கு அருகில் தில்லை நடராஜர் திருக்கோயில் உருவான அற்புத நிகழ்வு):

அப்பொழுது 1980ஆம் ஆண்டு, மகாராஷ்ட்ர மாநிலத்திற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த காஞ்சி மகாப்பெரியவர், பெருந்திரளென அடியவர்களும் உடன்வர, பூனேவிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில், சத்தாரா (satara) மாநகரத்திலுள்ள சஜ்ஜன்கட் (sajjangad) கோட்டையில் அமைந்துள்ள சமர்த்த ராமதாஸரின் பிருந்தாவனத்தை தரிசித்துப் போற்றி மகிழ்கின்றார். சில தினங்கள் அங்கு தங்கியிருந்துப் புறப்பட்டுச் செல்லும் வழியில் திடீரென்று ஓரிடத்தில் சாலையோரமாக அமர்ந்து விடுகின்றார். அடியவர்களிடம் அருகிலுள்ள இல்லமொன்றின் அடையாளத்தைக் கூறி, அங்கு குறிப்பிட்ட அறையினுள் வைக்கப்பட்டிருக்கும் படத்தினைக் கேட்டுப் பெற்று வருமாறு கூறுகின்றார். 

அனைவருக்கும் பெரு வியப்பு, சுவாமிகள் கூறிய அடையாளத்தின் படி அமைந்திருந்த இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்தோரிடம் சுவாமிகள் வருகை தந்துள்ள விவரத்தையும், அவர்கள் இல்லத்திலுள்ள படத்தைப் பற்றியும் விவரிக்கின்றனர். அவர்களும், சகல மரியாதைகளுடன் சென்று காஞ்சி மகானைப் பணிந்துத்  தங்களிடமிருந்த பெரியதொரு படத்தையும் சமர்ப்பிக்கின்றனர். சுவாமிகள் அதன் திரையை விலக்க, அது சத்ரபதி சிவாஜி மகராஜின் சித்திரம். 
காஞ்சிப் பெரியவர் நெகிழ்ச்சியுடன் அப்படத்திற்கு ஒரு சால்வையைப் போர்த்தி 'இன்று நம் தேசத்தில் இந்து தர்மம் தழைத்தோங்கி இருப்பதற்கு, சமர்த்த ராமதாஸரின் பரிபூரண கடாட்சத்தைப் பெற்ற 'வீர சிவாஜி' எனும் இந்த மகானின் தன்னலமற்ற சேவையும், அளப்பரிய வீரமுமே காரணம்' என்று போற்றுகின்றார். முன்பொரு சமயம் சிவாஜி மன்னர் தில்லையிலுள்ள நடராஜர் திருக்கோயிலைத் தரிசனம் செய்ய வந்திருந்த சமயத்தில், 'இது போன்றதொரு அற்புத ஆலயம் நம் மாநிலத்தில் இல்லையே' என்று பெரிதும் ஏங்கினாராம். அதனை நினைவு கூர்ந்த மகாப்பெரியவர், சிவாஜி மன்னரின் விருப்பத்தினை இச்சமயத்தில் நாம் பூர்த்தி செய்வோம், இவ்விடத்தில் ஒரு நடராஜர் திருக்கோயிலைப் புதுக்குவோம் என்று ஆசி கூறி அருள் புரிகின்றார்.
   
நான்கு வருடங்களில், நான்கு மாநில அரசுகளின் பங்களிப்போடு, ஒரு அற்புத நடராஜர் ஆலயம் அவ்விடத்தே உருவாகி 1984ஆம் குடமுழுக்கும் நன்முறையில் நடந்தேறுகின்றது. ஆத்தீக அன்பர்கள் அவசியம் சத்தாரா சென்று சமர்த்த ராமதாஸரின் பிருந்தாவனத்தையும், நடராஜப் பரம்பொருளின் ஆலயத்தையும் தரிசித்துப் போற்றுதல் வேண்டும்.