இராவணன் சீதா தேவியைக் கடத்திச் சென்றது பழிவாங்கும் பொருட்டா அல்லது முறையற்ற காம எண்ணத்திலா? (ஆதாரபூர்வ விளக்கங்கள):

'தங்கையான சூர்ப்பனகை மூக்கறுபட்டதால் அதற்குப் பழிவாங்கும் பொருட்டே தேவி சீதையை இராவணன் கடத்திச் சென்றானே அன்றி காம எண்ணத்தினால் அல்ல' என்று நாத்தீகக் கழகங்களும், இந்து மத விரோதப் போக்கினைக் கொண்ட கட்சிகளும் பெருமுனைப்புடன் மக்களை மூளைச் சலவை செய்து வருகின்றனர். இனிக் கம்ப இராமாயணத்தின் 'ஆரண்ய காண்டம் - சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம்' வாயிலாக உண்மையினை உணர்ந்துத் தெளிவுறுவோம் (மொத்தம் 170 பாடல்களைக் கொண்டது இப்படலம்).

சூர்ப்பனகை முன்னமே திருமணம் ஆனவள், எனினும் இராம; இலட்சுமணர்களின் மீது காம வயப்பட்டுப் பலவந்தமாக நெருங்க முயல்கின்றாள், அது நிறைவேறாது போகவே கடும் கோபமுற்று அன்னை சீதையைக் கொல்ல முயல்கின்றாள், அதனால் இலக்குவனால் மூக்கறு படுகின்றாள். நடந்தது இவ்வாறிருக்க இராவணனிடத்திலோ 'அண்ணா! விண்ணவரும் வியக்கும் சீதையெனும் பேரழகியைக் கண்டு அவளை உனக்குப் பரிசளிக்கும் பொருட்டு இழுத்து வர முனைந்தேன், அங்கிருந்த இராம; இலட்சுமணர்களோ என் மூக்கை அறுத்ததோடு உன்னையும் ஆண்மையற்றவன்; பேடி என்று பலவாறாகப் தூற்றினர்' என்று முழுவதுமாய் மாற்றிக் கூறுகின்றாள்.
மெதுமெதுவே அன்னை சீதையின் அழகினைப் பற்றிப் பலப்பல கூறி இராவணனின் மனதினில் காம நெருப்பினைப் பற்றச் செய்கின்றாள், இனி 'சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலத்தில் இடம்பெறும் பகுதிகளின் தலைப்பினைக் கண்டுத் தெளிவுறுவோம்'.

1. சூர்ப்பனகை வந்த போது இராவணன் இருந்த நிலை
2. சூர்ப்பனகையைக் கண்ட இலங்கை மாந்தரின் துயரம்
3. அண்ணன் இராவணன் அடிகளில் அரக்கி வீழ்தல்
4. யார் செய்தது இது என இராவணன் வினவல்
5. இராவணன் நடந்தது கூற வேண்டுதல்
6. சூர்ப்பனகை இராம இலக்குவர் குறித்துக் கூறுதல்
7. இராவணன் தன்னையே பழித்து மொழிதல்
8. என்ன செய்தான் கரன் என இராவணன் வினவுதல்
9.சூர்ப்பனகை நடந்தது நவிலல்
10. நீ செய்த பிழை யாது என இராவணன் வினவல்
11. சீதையின் அழகை சூர்ப்பனகை விரித்துரைத்தல்
12. இராவணனுக்கு மோகவெறி தலைக்கு ஏறல்
13.இராவணனின் முற்றிய காம நோய்
14. இராவணன் ஒரு குளிர் சோலை அடைதல்
15. இராவணன் சந்திரனைக் கொணரும்படி கூறல்
16. இராவணன் நிலவைப் பழித்தல்
17. இராவணனின் ஆணைப்படி பகலும் பகலவனும் வருதல்
18. இராவணன் கதிரவனைப் போகச்சொல்லி கவின் பிறையைக் கொணரச் சொல்லுதல்
19. பிறையைக் குறை கூறல்
20.இராவணன் இருளினை ஏசுதல்
21. சீதையின் உருவெளிப்பாடு காண்டல்
22. இராவணன்-சூர்ப்பனகை உரையாடல்
23. சந்திரகாந்த மண்டபம் சமைவித்து இராவணன் அதனுள் சார்தல்
24. இராவணன் தென்றலைச் சீறுதல்
25. இராவணன் மாரீசனை அடைதல்

மேற்குறித்துள்ள பகுதிகளுள், 11,12,13 பகுதிகளான 'சீதையின் அழகை சூர்ப்பனகை விரித்துரைத்தல்', 'இராவணனுக்கு மோகவெறி தலைக்கு ஏறல்', 'இராவணனின் முற்றிய காம நோய்' ஆகியவை 'இராவணன் சீதா தேவியைக் கவர்ந்து சென்றது முறையற்ற காம எண்ணத்தின் பொருட்டே' என்று மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.

அனைவரும் அவசியம் முறையான கம்ப இராமாயண உரை நூலினை வாங்கி ஆரண்ய காண்டத்தின் 'சூர்ப்பனகைப் படலம், சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம்' ஆகியவற்றை முழுவதுமாய்ப் படித்துத் தெளிவுறுவோம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

No comments:

Post a Comment