முருகப் பெருமானை பலமுறை நேரிலேயே தரிசித்துப் போற்றியுள்ள அருணகிரிநாதர் 'இத்தாரணிக்குள்' என்று துவங்கும் திருப்புகழின் இறுதி வரிகளில் இராவணனை மிகக் கடுமையாய்ச் சாடிப் பின் திருமாலின் அவதாரமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் போற்றுகின்றார்,
-
மத்தா மதக்களிறு பின்தானுதித்த குகன்
ஏதத்திலங்கையினில் ஆதிக்கம்உண்டதொரு
முட்டாள்அரக்கர்தலை இற்றே விழக்கணைக
ளேதொட்ட கொண்டலுருவாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமலம் உற்றா சனத்திருவை
மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய ...... மருமகனாகி
-
(சுருக்கமான பொருள்):
யானையின் திருமுகம் கொண்ட ஸ்ரீவிநாயக மூர்த்தியின் பின்னர் தோன்றிய ஆறுமுகக் கடவுளே, குற்றம் நிறைந்த இலங்கையை ஆண்டு வந்த, அறிவு ஒருசிறிதுமில்லாத முட்டாள் அரக்கனான இராவணனின் தலைகள் பத்தும் நிலத்தில் இற்று விழுமாறு கணைகளை ஏவிய, மேகத்தின் நிறம் கொண்டவரும், சனகன் மகளாகிய அன்னை சீதையை மணம் புரிந்தவருமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அன்புக்கு உரிய மருமகனே!!!
No comments:
Post a Comment