இராமாயணத்தில் ஆரிய சூழ்ச்சியா? (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

நான்முகக் கடவுளான பிரமனின் 10 புதல்வர்களுள் ஒருவர் புலஸ்திய மகரிஷி, அந்தணர் மரபினரான இவரின் புதல்வர் விஸ்ரவ முனிவர், விஸ்ரவரின் முதல் மனைவியான கைகேசிக்கு பிறந்தவர்கள் நால்வர், இராவணன்; கும்பகர்ணன்; விபீஷணன் மற்றும் சூர்ப்பனகை. ஆக இராவணன் அந்தண மரபு என்பது தெளிவு, சூர்ப்பனகை ஸ்ரீராமனைக் காமம் கொண்டு நெருங்குகையில் தசரத மைந்தன் பலப்பல அறங்களைக் கூறியும் அவள் எண்ணம் மாறாததால் இறுதியாய் 'பெண்ணே! நம் இருவரின் மரபும் வெவ்வேறு, நீயோ அந்தண மரபு, நானோ சத்ரிய வம்சமான அரச குலம் ஆதலின் இது பொருந்தாது' என்று கூறுகின்றார்.

கவிச்சக்கரவர்த்தி இதனை 'அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' எனும் இறுதி வரியில் பதிவு செய்கின்றார்.

(கம்ப இராமாயணம்: ஆரண்ய காண்டம்: சூர்ப்பணகைப் படலம், திருப்பாடல் 49)
'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்;
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்;
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்றான்.

வால்மீகி; கம்பர் இருவருமே மிகத் தெளிவாக இராவணன் அந்தண மரபினன் என்றுச் சுட்டியுள்ளனர், மேலும் வால்மீகி வேடர் குலத்தினர், கம்பரோ பாணர் மரபினர், ஆக இராமாயணத்தை எழுதியவரும் பிராமணர் அல்லர் அதில் எழுதப் பெற்றுள்ள நாயகனான ஸ்ரீராமரும் பிராமணர் அல்லர்; சத்ரிய வம்சத்தினர் எனில் ஆரிய சூழ்ச்சி இதில் எங்கு தான் வருகின்றது? என்பதே நகைப்புக்குரிய கேள்வி.

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

No comments:

Post a Comment